'நடிகை குஷ்பு அரசியலில் சாதாரண நபர் அல்ல' - பொன்.ராதாகிருஷ்ணன்
நடிகை குஷ்பு அரசியலில் சாதாரண நபர் அல்ல எனக் கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த நடிகை குஷ்பு பா.ஜ.க வில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பியபோது,
''குஷ்பு அரசியலில் சாதாரண ஒரு ஆட்களைபோல் இல்லாமல் ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவர். 2013-14-ஆம் ஆண்டுவாக்கிலேயே பா.ஜ.க வில் இணைய வேண்டியவர். மோடி அவர்களை விமர்சனம் செய்தது அழுத்தத்தினால் என்று அவரே கூறியுள்ளார்'' என்றார்
மேலும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா குறித்து பேசுகையில். ''பல்கலைக்கழகத்தை மேம்படுத்த துணைவேந்தர்கள் இது போன்று செய்வது கடமை. அவர் செய்ததில் தவறில்லை என்றும் கூறினார்.
பிரசாந்த் கிஷோர் வைத்திருக்கும் தி.மு.க வின் திட்டம் நிறைவேறுமா எனக் கேட்டபோது, ''பிரசாந்த் கிஷோர் திறமையானவர். வழிகாட்டும்போது யாருக்கு வழிகாட்டுகிறார் என்பது முக்கியம். வாகனம் ஓட்டும்போது எந்த வாகனத்தை ஓட்டுகிறார் என்பது முக்கியம் என்றும் அவர் நாலு வீலும் இல்லாத பிரேக்கும் இல்லாத வாகனத்தை ஓட்ட முயற்சிக்கிறார்'' என்றார்.

