குஷ்புவின் கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: யாருக்கும் காயமில்லை

குஷ்புவின் கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: யாருக்கும் காயமில்லை
குஷ்புவின் கார் மீது கண்டெய்னர் லாரி  மோதி விபத்து: யாருக்கும் காயமில்லை

செங்கல்பட்டு அருகே குஷ்பு சென்ற கார் மீது, கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி குஷ்பு சென்ற காரின் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து புதிய தலைமுறைக்கு தொலைபேசியில் பேசிய குஷ்பு, "இந்த விபத்தில் கார் மட்டுமே சேதம் அடைந்தது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெறும் என்று நம்புகிறேன். கடவுள் அருளால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடலூரில் நடைபெறவுள்ள வேல் யாத்திரையில் கலந்துகொள்வேன்" என்றார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com