தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனத்தின் புதிய தலைவராக குறிஞ்சி என்.சிவகுமார் நியமனம்

தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனத்தின் புதிய தலைவராக குறிஞ்சி என்.சிவகுமார் நியமனம்
தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனத்தின் புதிய தலைவராக குறிஞ்சி என்.சிவகுமார் நியமனம்

தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனத்தின் புதிய தலைவராக குறிஞ்சி என்.சிவகுமாரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை மக்களுக்கு வழங்கிடவும், கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் அதன் தலைவர் பதவி காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு, குறிஞ்சி என்.சிவகுமாரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்த குறிஞ்சி என்.சிவகுமார், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆபரேடர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com