குரங்கணி காட்டுத்தீ : விசாரணை அதிகாரி நியமனம்

குரங்கணி காட்டுத்தீ : விசாரணை அதிகாரி நியமனம்
குரங்கணி காட்டுத்தீ : விசாரணை அதிகாரி நியமனம்

குரங்கணி காட்டுத்தீ சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக 36 பேர் வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத் தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குரங்கணி காட்டுத்தீ சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா விசாரணை நடத்துவார் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி நடந்ததாக கூறப்படுவது உள்ளிட்டவை குறித்து அதுல்ய மிஸ்ரா விசாரிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுல்ய மிஸ்ரா 2 மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com