குரங்கணி விபத்து: அதீத தீக்காயங்களுடன் பெண் மருத்துவமனையில் அனுமதி
குரங்கணி தீ விபத்தில் அதீத தீக்காயத்துடன் மீட்கப்பட்ட பெண் ஒருவர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட மலைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மலையேற்றம் சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த 22 பெண்கள் உட்பட 24 பேரும், திருப்பூரைச் சேர்ந்த 12 பேரும் மலையேற்றம் சென்றது தெரியவந்துள்ளது. தகவலறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீட்பு பணிகளுக்காக விமானப்படை ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவிட்டார். இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தீ விபத்தில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் 10 பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர அதீத தீக்காயங்களுடன் பெண் ஒருவர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.