\
கும்மிடிபூண்டி : உலக சாதனை படைத்த யோகா ஆசிரியர்.!

கும்மிடிபூண்டி : உலக சாதனை படைத்த யோகா ஆசிரியர்.!

கும்மிடிபூண்டி : உலக சாதனை படைத்த யோகா ஆசிரியர்.!
Published on: 

உலக சாதனை படைத்திருக்கும் யோகா ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சந்தியா என்பவர் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் யோகாசனங்களில் பல சாதனைகளை படைத்து வருகிறார்.

அந்த வகையில், மிகவும் கடினமான விருச்சிகாசனத்தில் நின்றபடி, இரண்டு வரிசை மற்றும் மூன்று வரிசை க்யூப்களை, 26 வினாடிகளில் சேர்த்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இவருடைய இந்த சாதனை மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு பலதரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com