\
நடத்துனரை தாக்கிய இளைஞர்கள்
நடத்துனரை தாக்கிய இளைஞர்கள்pt desk

கும்பகோணம் | மது போதையில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

கும்பகோணம் அருகே அரசுப் பேருந்து நடத்துநரை மது போதையில் சிலர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

செய்தியாளர்: விவேக்ராஜ்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு குடவாசல் நோக்கி அரசுப் பேருந்து புறப்பட்டுள்ளது. அப்போது அந்த பேருந்தில் மது போதையில் ஏறிய இளைஞர்கள் சிலர் ஒருவருக்கொருவர் சத்தம்போட்டு தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பயணிகள், நடத்துநரிடம் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.

நடத்துனரை தாக்கிய இளைஞர்கள்
நடத்துனரை தாக்கிய இளைஞர்கள்pt desk

இதையடுத்து, மது போதையில் இருந்த இளைஞர்களிடம் சத்தம் போடாமல் அமைதியாக வருமாறு தெரிவித்துள்ளார். இதனால் அந்த இளைஞர்கள் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்தை விட்டு கீழே இறங்குமாறு நடத்துநர் கூறியதால், ஆத்திரமடைந்த அவர்கள், பேருந்து விட்டு கீழே இறங்கி நடத்துநரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

நடத்துனரை தாக்கிய இளைஞர்கள்
சென்னை To போடி | மதுரை ரயில் நிலையத்தில் தடம்புரண்ட சூப்பர் பாஸ்ட் ரயில் - அதிகாரிகள் விசாரணை!

இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அந்த பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com