கும்பகோணம்புதிய தலைமுறை
தமிழ்நாடு
கும்பகோணம்: கூடுதல் போதைக்காக சானிடைசரில் போதை மாத்திரையை கலந்து குடித்த இருவர் பலி
அதிக போதை வேண்டும் என்பதற்காக போதை மாத்திரையை சானிடைசரில் கலந்து குடித்த இரு கட்டடத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்பகோணம் சக்கரப்பரித்துறையைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (43) மற்றும் பாலகுரு (42) ஆகிய இருவரும் அதிக போதை வேண்டும் என்பதற்காக போதை மாத்திரையுடன் சானிடைசரை கலந்து குடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை இவர்கள் இருவரும் சக்கரப்படித்துறை காவிரி மேல்கரையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
Hospitalpt desk
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.