கும்பகோணம் | திமுக கவுன்சிலருடன் ஏற்பட்ட மோதல்.. நெஞ்சுவலிப்பதாக அலறிய மேயர்! கூட்டத்தில் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலருடன் மோதல் ஏற்பட்ட நிலையில், நெஞ்சு வலிப்பதாகக் கூறி, மேயர் திடீரென கீழே விழுந்து அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணத்தில் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்திக்கும், மாநகராட்சி காங்கிரஸ் கட்சி மேயர் சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நெஞ்சு வலிப்பதாக அலறிய மேயர்..
அப்போது, கூட்டம் முடிந்ததாக தன்னுடைய அறைக்கு சென்றபோது, மேயரின் அறையை திமுக கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தி பூட்டிவிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மீது ஏறி மிதித்துவிட்டு மேயர் உள்ளே செல்ல மேயர் முயன்றார்.
அந்த சமயத்தில், தன்னை மேயர் கொலை செய்ய பார்க்கிறார் என அவர் கத்திக் கூப்பாடு போடவே, உடனடியாக மேயர் கீழே விழுந்து தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி அலறினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.