தமிழ்நாடு
கும்பகோணம் தீ விபத்து வழக்கு: மேல்முறையீடு செய்ய பெற்றோர்கள் வேண்டுகோள்
கும்பகோணம் தீ விபத்து வழக்கு: மேல்முறையீடு செய்ய பெற்றோர்கள் வேண்டுகோள்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தொடர்புடைய 9 பேரை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விடுவித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் பெற்றோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுவித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தங்களுக்கு வேதனையளிப்பதாக குழந்தைகளின் பெற்றோர் கூறினர். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். குழந்தைகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட இடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியவர்கள், தீ விபத்து நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கு பேரணியாகச் சென்றனர்.