கும்பகோணம்: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு சிலைகள் மீட்பு!

கும்பகோணம்: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு சிலைகள் மீட்பு!
கும்பகோணம்: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு சிலைகள் மீட்பு!

கும்பகோணம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கும்பகோணம் பகுதியில் பழமை வாய்ந்த சிலைகளை மௌன சாமி மடத்தின் நிர்வாகிகளால் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, இந்து முன்னணி சேர்ந்த 20 நபர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் மௌனசாமி மடத்தெருவில் அமைந்துள்ள மௌனசாமி மடத்திற்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தின் உத்தரவின்படி நேரடியாக சென்றனர். அப்பொழுது மடத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள ரகசிய அறையில் நான்கு உலோக சிலைகள் மற்றும் 63 நாயன்மார்களின் உருவப் படங்கள் இருப்பதை உறுதி செய்தனர்.

அதில் உலோகத்தால் ஆன விநாயகர் சிலை, முருகர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, மற்றும் நடராஜர் சிலை ஆகியவற்றின் தொடர்பாக மடத்தின் நிர்வாகிகளிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்கள். அப்பொழுது மடத்தின் நிர்வாகிகள் இந்த சிலைகள் அனைத்தும் எங்கள் தாத்தா காலத்தில் இருந்து இருப்பதாகவும், இதற்கு உரிய ஆவணங்கள் எங்களிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த நான்கு சிலைகளையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தை அடுத்து இந்த நான்கு சிலைகளும் தமிழகத்தில் உள்ள எந்தெந்த கோவில்களுக்கு சொந்தமுடையது என்பது தொடர்பாக இந்து சமய அறநிலைத் துறையிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com