பயிற்சி வகுப்பு செல்லாமலே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெற்ற குமரி மாணவர்!

பயிற்சி வகுப்பு செல்லாமலே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெற்ற குமரி மாணவர்!

பயிற்சி வகுப்பு செல்லாமலே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெற்ற குமரி மாணவர்!
Published on

பயிற்சி வகுப்பு செல்லாமலே யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானதாக இந்திய அளவில் 7 வது இடம்பிடித்த கன்னியாகுமரியைச் சேர்ந்த கணேஷ் தெரிவித்துள்ளார். 

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ் குமார், அகில இந்திய அளவில் 7 வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து கணேஷ்குமார் கூறுகையில், ‘எம்.பி.ஏ படிக்கும்போதுதான் IFS  ஆவல் எனக்கு ஏற்பட்டது. எம்.பி.ஏ படித்துவிட்டு பெங்களூருவில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். வேலை பார்த்துக்கொண்டே யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக படித்தேன். பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் அமர்ந்து முழுமையாக தேர்வுக்கு தயார் செய்தேன்.

2018-ம் ஆண்டு முதலில் தேர்வு எழுதினேன். மதிப்பெண்கள் குறைவாக கிடைத்தது. நான் நன்றாக பயிற்சி செய்யவில்லை, எந்த விஷயங்களில் தவறுகள் செய்தேன் என்பதை கண்டுபிடித்து மீண்டும் 2019ம் ஆண்டு தேர்வு எழுதினேன்.

இப்போது அகில இந்திய அளவில் 7 வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஏழாவது ரேங்க் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. முதல் 100 இடங்களில் இடம்பெற்றால் போதும், பாரின் சர்வீஸ் கிடைக்க வேண்டும் என்று எண்ணி தேர்வு எழுதினேன். இப்போது ஏழாம் இடம் கிடைத்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சி. நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு படிக்க வேண்டும் என்று கூறியபோதும் பெற்றோர் ஆதரவு அளித்தனர்.

தேர்வுக்காக நான் நேரடி பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவில்லை, ஆன்லைன் சேவைகளை பயன்படுத்திக்கொண்டேன்’’ என்றார்.

படம் உதவி: ஜாக்சன் ஹெர்பி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com