\
எச்.வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி - குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

எச்.வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி - குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

எச்.வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி - குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி
Published on

காங்கிரஸ் எம்பி எச்.வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 70 வயது நிரம்பிய கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். கொரோனா நெகட்டிவ் ஆகிவிட்ட போது அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், எச்.வசந்தகுமார் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்ற அவரது சகோதரரும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com