\
குளித்தலை: அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கிய உணவில் அழுகிய முட்டைகள்

குளித்தலை: அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கிய உணவில் அழுகிய முட்டைகள்

குளித்தலை: அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கிய உணவில் அழுகிய முட்டைகள்
Published on

குளித்தலை அருகே நாகலூர் அரசு தொடக்கப்பள்ளியில் புழு மற்றும் துர்நாற்றத்துடன் முட்டைகளை குழந்தைகளுக்கு கொடுத்ததாக மேலாண்மை குழுவினர் குற்றச்சாட்டியதுடன் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகனூர் ஊராட்சி பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது, இப்பள்ளியில் சுமார் 150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியில் மதிய உணவில் வழங்கும் முட்டைகள் கெட்டுப்போய், புழு வைத்துள்ளதாக பள்ளி மாணவர்கள் பெற்றோர்களிடம் கூறியதைத் தொடர்ந்து பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் செல்வராணி மற்றும் உறுப்பினர்கள் பள்ளியில் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், முட்டைகளில் புழு வைத்தும், கெட்டுப்போன வாடை வருவதையும் கண்டறிந்ததுடன், குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டைகளையே மதிய உணவிற்கு அளித்ததையும் அறிந்து, நடவடிக்கை எடுக்க தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்று குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டைகளை வழங்கி வருவதால் பல்வேறு தொற்று நோய்கள் வர வாய்ப்புள்ளது என்றும், உடனடியாக இதுபோன்ற முட்டைகள் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மேலாண்மை குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com