கூடலூர்: தெருவில் சென்றவர்களை துரத்தித் துரத்தி கடித்துக் குதறிய வெறிநாய்

கூடலூர்: தெருவில் சென்றவர்களை துரத்தித் துரத்தி கடித்துக் குதறிய வெறிநாய்

கூடலூர்: தெருவில் சென்றவர்களை துரத்தித் துரத்தி கடித்துக் குதறிய வெறிநாய்
Published on

கூடலூர் அருகே 17 பேரை கடித்த வெறி நாய் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. நாய்க்கடிக்கு ஆளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வனப்பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று வெறி பிடித்த நிலையில் சுற்றித் திரிந்தது. அத்திக்குன்னா பகுதியில் ஊர் மக்களை அந்த நாய் கடித்தது. இந்நிலையில் அத்திக்குன்னா பகுதியிலிருந்து தேவாலா பகுதிக்கு வந்த வெறிநாய் காவலர், சிறுவன் உள்ளிட்டவர்களை கடித்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மூதாட்டி ஒருவரையும் கடித்துக் குதறியது. பின்னர் அங்கிருந்து பொன்னூர் பகுதிக்கு வந்த வெறி நாய் அங்கு மேலும் 4 பேரை கடித்தது. இரண்டு தினங்களில் அந்த நாய் 17 பேரை கடித்திருக்கிறது.

இந்த நிலையில், வெறி பிடித்த நிலையில் சுற்றித் திரிந்த அந்த நாயை பொன்னுர் பகுதியில் வைத்து நகராட்சி பணியாளர்கள் பாதுகாப்பாக பிடித்தனர். பிடிக்கப்பட்ட நாய் சிகிச்சைக்காக மாவனல்லா பகுதியில் உள்ள விலங்குகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாய் கடிக்கு ஆளானவர்கள் அனைவரும் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com