\
நாளை அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்பர் - தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி

நாளை அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்பர் - தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி

நாளை அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்பர் - தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி
Published on

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து எம்எல்ஏக்களும் நாளை பதவி ஏற்பார்கள் என தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் "புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் முறை தற்காலிக சபாநாயகராக தொடர்வேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து எம்எல்ஏக்களும் நாளை பதவி ஏற்பார்கள். எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு தொடர்பாக அந்தந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார். 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் கூடுகிறது. 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் நடைபெறுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் நாளை சட்டப்பேரவையில் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com