திமுக-விலிருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன்... திமுக வட்டாரங்கள் சொல்லும் காரணமென்ன?

திமுக-விலிருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன்... திமுக வட்டாரங்கள் சொல்லும் காரணமென்ன?
திமுக-விலிருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன்... திமுக வட்டாரங்கள் சொல்லும் காரணமென்ன?

திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என அறிவித்துள்ளார்.

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் மூலம் சமூக தளங்களில் கட்சி தலைமைக்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டு வந்ததால் நீக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ராஜ்யசபா தேர்தலின் போது இவருக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்ததாக தெரிகிறது. அவருக்கு வாய்ப்பு வழங்காத காரணத்தால் தொடர்ச்சியாக கட்சி தலைமைக்கு எதிராக பதிவிட்டு வந்ததாக தகவல்.

- எம்.மகேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com