\
"காங்கிரஸ் விரும்பும் இடங்களை தர திமுக பரிசீலனை" - கே.எஸ்.அழகிரி பேட்டி

"காங்கிரஸ் விரும்பும் இடங்களை தர திமுக பரிசீலனை" - கே.எஸ்.அழகிரி பேட்டி

"காங்கிரஸ் விரும்பும் இடங்களை தர திமுக பரிசீலனை" - கே.எஸ்.அழகிரி பேட்டி
Published on

காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்களை தருவது பற்றி பரிசீலிப்பதாக திமுக உறுதி அளித்துள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை ஒதுக்க திமுக மாவட்டச் செயலாளர்களை அறிவுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ''தேர்தலில் இடங்களைப் பெறுவது தொடர்பாக மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 2அல்லது 3தினங்களில், வேட்பாளர்களின் பட்டியல், மாவட்ட அளவிலேயே வெளியிடப்படும். வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்டுப் பெற மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com