\
கிருஷ்ணகிரி: கொரோனா தொற்றால் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கொரோனா தொற்றால் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கொரோனா தொற்றால் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
Published on

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக ராமமூர்த்தி (55) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இந்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com