\
கிருஷ்ணகிரி: பெண்ணிடம் 7 சவரன் நகையை பறித்துச் சென்ற நபரை தேடும் போலீசார்

கிருஷ்ணகிரி: பெண்ணிடம் 7 சவரன் நகையை பறித்துச் சென்ற நபரை தேடும் போலீசார்

கிருஷ்ணகிரி: பெண்ணிடம் 7 சவரன் நகையை பறித்துச் சென்ற நபரை தேடும் போலீசார்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 சவரன் நகையை பறித்துச் சென்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

காந்திநகரில் வசிக்கும் ஷோபா என்பவர் குழந்தைகளை அழைத்துவர பள்ளிக்கூடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது ஷோபாவை பின் தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத நபர், அவர் அணிந்திருந்த 7 சவரன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார்.

இதையடுத்து ஷோபாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திருடனை பிடிக்க முயன்றனர். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com