கிருஷ்ணகிரி: தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுவன்; போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி: தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுவன்; போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி: தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுவன்; போலீஸ் விசாரணை
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்ட போலீசார் கொலைவழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்கூர் அருகே உள்ள காரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கொடலேட்ட கிராமத்தில் இருந்து உச்சனகொல்லைக்கு செல்லும் வழியில் மல்லேஸ்வரன் மலை அடிவாரத்திற்கு அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் விறகு சேகரிப்பதற்காக சென்றனர். அப்போது, அப்பகுதியில் சிறுவனின் சடலம் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு பர்கூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


தகவல் அறிந்து, பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில சிறுவனின் உடலில் தீக் காயங்களும், பிரம்பால் அடித்த காயங்களும், வாயில் மிளகாய் பொடி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


உயிரிழந்த சிறுவனை மர்ம நபர்கள் கடத்தி வந்து, கொலை செய்து வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த சிறுவன் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? யார் என்பது தெரியவில்லை. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com