கிருஷ்ணகிரி: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து – பெண் உட்பட இருவர் பலி

கிருஷ்ணகிரி: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து – பெண் உட்பட இருவர் பலி

கிருஷ்ணகிரி: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து – பெண் உட்பட இருவர் பலி
Published on

அஞ்செட்டி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆறு ஆண்கள் ஒரு பெண் உட்பட 7 பேர்; காரில் ஒகேனக்கல் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, சேசுராஜபுரம் அருகே வந்தபோது, வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து உருண்டு மரத்தில் மீது பலமாக மோதி விபத்திற்குள்ளானது.

இதில் காரில் சென்ற ஒரு ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒரு பெண் உயிரிழந்தார்.

மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அஞ்செட்டி போலீசார், உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com