\
பேய் விரட்டும் சடங்கில் தீவிபத்து - ஒருவர் உடல்நசுங்கி பலி

பேய் விரட்டும் சடங்கில் தீவிபத்து - ஒருவர் உடல்நசுங்கி பலி

பேய் விரட்டும் சடங்கில் தீவிபத்து - ஒருவர் உடல்நசுங்கி பலி
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஆடி அமாவாசை பூஜையில், பேய் விரட்டும் சடங்கிற்காக பட்டாசு வெடித்த போது ஒருவர் உயிரிழந்தார்.

எ.மோட்டூர் கிராமத்தில் பேய் விரட்டும் சடங்கிற்காக பிள்ளையார் கோயில் வாசலில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசு பெட்டியில் தீப்பொறி விழுந்ததால், மற்ற பட்டாசுகளும் வெடித்து சிதறின. இந்த விபத்தில் வெடிப்பொருட்களின் வீரயத்தால் கோயிலே இடிந்து விழுந்தது. இதில் கோயிலுக்கு பேய் விரட்ட வந்தவரில் மாரியப்பன் என்பவர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மேலும் 8 பேர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கோயிலில் பகுதியிலிருந்து பரவிய தீ அருகிலிருந்த வைக்கோள் போருக்கும் பரவியதால், நீண்ட நேர போராடி தீயணைப்பு வீரர்கள் நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com