விபத்து நடந்த இடத்தில் தந்தை பூஜை
விபத்து நடந்த இடத்தில் தந்தை பூஜைFile image

கிருஷ்ணகிரி | "உயிரிழந்த என் மகனோட ஆத்மா வீட்டுக்கு வரணும்"- நடுரோட்டில் பூஜை செய்த தந்தை!

கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் ஆத்மா வீட்டுக்கு வரவேண்டி விபத்து நடந்த இடத்தில் தந்தை பூஜை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி மாருதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய மகன் ராஜசேகர் (23), ஓசூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

உயிரிழந்த ராஜசேகர்
உயிரிழந்த ராஜசேகர்

கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி இரவு, ராஜசேகர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஓசூர் சிப்காட் காவல் நிலையம் அருகே சாலையில் படுத்திருந்த நாய் மீது இவரது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். அப்போது எதிரே வந்த பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்தில் தந்தை பூஜை
பட்டியலின மக்கள் மீது சரமாரி தாக்குதல்: வைரலாகும் வீடியோ

இதனையடுத்து உயிரிழந்த ராஜசேகரின் தந்தை துரைராஜ் மற்றும் சகோதரர் தொல்காப்பியன் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று விபத்து நடந்த இடத்திற்குச் சென்று விபத்தில் உயிரிழந்த ராஜசேகரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காகவும், ஆத்மா சாலைகளில் சுற்றித்திரியாமல் வீட்டுக்கு வர வேண்டியும் பூஜைகளை செய்தனர். இது தங்களின் நம்பிக்கை எனவும் இதன் மூலம் உயிரிழந்த தங்களின் மகன் ஆத்மாவாக வீட்டிற்கு வருவார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த மகனின் ஆன்மா வீட்டுக்கு வரவேண்டி நடுரோட்டில் பூஜை செய்த தந்தையால் அந்த பகுதியில் சில நேரத்துக்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து நடந்த இடத்தில் தந்தை பூஜை
மதுரை: " 3 கர்ப்பிணி பசுமாடுகள் கொலை" - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com