ஆற்றில் பொங்கும் நுரை: காரணம் புரியாமல் மக்கள் அவதி

ஆற்றில் பொங்கும் நுரை: காரணம் புரியாமல் மக்கள் அவதி

ஆற்றில் பொங்கும் நுரை: காரணம் புரியாமல் மக்கள் அவதி
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் அளவுக்கு அதிமகான  நுரை மிதந்து வருகிறது. அதற்கான காரணம் என்ன புரியாமல் பொது மக்கள் குழம்பிபோய் உள்ளனர்.

கர்நாடாகா மற்றும் தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கெலவரப்பள்ளி அணை நிரம்பிவிட்டது. அதனால், 15 ஆண்டுகளுக்கு பிறகு, 4 அயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் தண்ணீரிலிருந்து பொங்கி வந்த நுரையைப் பார்த்து கலக்கம் அடைத்தனர். இந்த நுரை ரசாயன தொழிற்சாலையிலிருந்தோ, சாயப் பட்டறையிலிருந்தோ வெளிவரவில்லை. கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரிலிருந்துதான் இந்த மாதிரியான நுரைகள் வருகின்றன.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து நுரை ஊருக்குள் புகுந்துவிடாமல் தடுத்தனர். அணையிலிருந்த‌ வெளியேறும் நீரின் அளவை 1,500 கன அடியாக மாவட்டம் நிர்வாகம் குறைத்ததையடுத்து, நுரை அளவும் குறைந்தது. நுரையினால் மூழ்கி கிடந்த தரைப் பாலமும் சீரானது. அணையில் நுரை மிதக்க என்ன காரணம் என கண்டறிய தண்ணீரின் மாதிரி ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கு பிறகே நுரை மிதப்புக்கான காரணம் தெரியவரும் என்றும், அதன்பின் அதனை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் புதியதலைமுறைக்கு வாக்குறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com