கிருஷ்ணகிரி: வெடித்துச் சிதறிய பட்டாசு குடோன்.. தரைமட்டமான கட்டடங்கள் - 8 பேர் பலி! காரணம் என்ன?

கிருஷ்ணகிரி நகர் பழைய பேட்டை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அச்சமுள்ளதாக தெரிய வருகிறது.

கிரிஷ்ணகிரியின் பழைய பேட்டை பகுதியில் ரவி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு குடோன் அருகில் இருந்து ஒரு உணவகம் தரைமட்டமாகியுள்ளது. அந்த உணவக இடிபாடுகளுககுள் 5க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்களை மீட்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

fire service
fire servicept desk

அதேபோல் பட்டாசு குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் சாலையில் சென்ற 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்; அடைந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த கடைகளும் தரைமட்டமாகியுள்ளன. இதையடுத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை 4 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மீட்புப் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினரும் மாவட்ட வருவாய்த் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com