\
கிருஷ்ணகிரி: சாலையில் கொரோனா மருத்துவ கழிவுகள்; அச்சத்தில் மக்கள்

கிருஷ்ணகிரி: சாலையில் கொரோனா மருத்துவ கழிவுகள்; அச்சத்தில் மக்கள்

கிருஷ்ணகிரி: சாலையில் கொரோனா மருத்துவ கழிவுகள்; அச்சத்தில் மக்கள்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள மிட்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொரோனோ உபகரணங்கள், கழிவுகள் சாலையில் வீசப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே, ஊத்தங்கரை- திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொரோனோ நோய் தடுக்கும் பொருட்டு பயன்படுத்திய உபகரணங்கள், கழிவுகள் ஆகியவை சாலையில் வீசப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது கடந்த சில தினங்களாகவே சிங்காரப்பேட்டை பகுதியில் தொற்று அதிகம் காணப்படுகிறது. அதனால் அந்த கழிவுகள் அனைத்தும் சிங்காரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்படுத்தப்பட்டவை எனவும் அவற்றை இன்று காலை அகற்றிய துப்புரவு வாகனம் அந்த வழியாக செல்லும்போது காற்றில் பறந்து தவறி சாலையில் கிடப்பதாக தெரிகிறது. அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக சிங்காரபேட்டை பஞ்சாயத்து தலைவர் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com