கொரோனாவால் கணவரை இழந்து, கனமழையால் வீடு இழந்த பெண்ணுக்கு புதிய வீடு- கிருஷ்ணகிரி ஆட்சியர்

கொரோனாவால் கணவரை இழந்து, கனமழையால் வீடு இழந்த பெண்ணுக்கு புதிய வீடு- கிருஷ்ணகிரி ஆட்சியர்
கொரோனாவால் கணவரை இழந்து, கனமழையால் வீடு இழந்த பெண்ணுக்கு புதிய வீடு- கிருஷ்ணகிரி ஆட்சியர்

மழையால் வீடு இழந்து தவித்த பெண்ணுக்கு ஊரக வளர்ச்சித்துறை மூலமாக புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

கங்கானூர் கிராமத்தில் மழையால் வீடு இழந்து 3 குழந்தைகளுடன் ராதா என்ற பெண் குளியலறையில் வசித்து வந்த செய்தி புதிய தலைமுறையில் வெளியானது. கொரோனாவால் கணவரை இழந்த ராதாவின் வீடு கனமழையால் நவம்பர் 14ஆம் தேதி இடிந்து விழுந்தது.

இதுகுறித்து புதியதலைமுறையில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து முதற்கட்டமாக ரூ.5,200 நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை மூலமாக புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com