கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்.. குடும்பத் தகராறில் விபரீத முடிவு

கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்.. குடும்பத் தகராறில் விபரீத முடிவு

கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்.. குடும்பத் தகராறில் விபரீத முடிவு
Published on

ஊத்தங்கரை அருகே குடும்பத் தகராறு காரணமாக தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். கூலித் தொழிலாளியான இவருக்கு அம்மு (35) என்ற மனைவியும், சுஜக்சா (7), பீஷ்மர், (5) ரேண்டி ஆர்டன், மாரநிலமாறன், சுபிக்சா, ஆகிய ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தாறில் அம்மு தனது குழந்தைகளான சுபிக்சா, மற்றும் பீஷ்மர் ஆகியோருடன் சேலம் சென்னை ரயில்வே பாதையில் ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்,

துகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொரப்பூர் ரயில்வே துறையினரும், கல்லாவி காவல் துறையினரும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கல்லாவி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, இது குறித்து சேலம் இரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்,

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com