periyasamypt desk
தமிழ்நாடு
கிருஷ்ணகிரி: பிறந்து 46 நாட்களே ஆன பெண் குழந்தை தொடர் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு
போச்சம்பள்ளி அருகே பிறந்து 46 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போச்சம்பள்ளி அடுத்த பாளேதோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி - மணிமேகலை தம்பதியர். இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்து 46 நாட்கள் ஆன நிலையில், கடந்த 27.09.2023 அன்று பாளேதோட்டம் கிராமத்தில் உள்ள கிராம செவிலியரிடம் தடுப்பூசி போட்டுள்ளனர்.
hospitalpt desk
இந்நிலையில், குழந்தைக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இறந்தது இரண்டாவது பெண் குழந்தை என்பதால் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.