தமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு

தமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு
தமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் ஜீரோ பாய்ண்ட்டை வந்தடைந்தது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு-கங்கா ஒப்பந்தத்தின்படி இந்த பருவத்திற்கான 8 டிஎம்சி தண்ணீரை வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதினார். இதே கோரிக்கையை தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் நேரில் வலியுறுத்தினர்.

அதன் அடிப்படையில் கடந்த 25 ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 1 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது தமிழக எல்லையான ஜீரோ பாய்ண்ட்டை வந்தடைந்தது. அதனை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com