சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறப்பு
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 200 கன அடி கிருஷ்ணா நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தபடி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். கடந்த பருவத்தில் கண்டலேறு அணையின் நீர் இருப்பு 3.7 டிஎம்சியாக இருந்ததால் சென்னைக்கு ஆந்திர அரசு தண்ணீர் திறக்கவில்லை. இந்தநிலையில் ஆந்திராவில் பெய்த கனமழையால் ஸ்ரீசைலம் அணை நிரம்பியது. அதனால், தெலுங்கு - கங்கா கால்வாயில் விநாடிக்கு 15ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால், கண்டலேறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
தற்போது சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்லேறு அணையிலிருந்து வினாடிக்கு 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரின் அளவு படிப்படியாக ஆயிரத்து 500 கன அடியாக உயர்த்தப்படும் என ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.