ஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி

ஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி
ஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி

கோடநாடு விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். 

கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்றதாக கூறப்படும் கொலை மற்றும் கொள்ளை குறித்து ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், நேர்மையான முறையில் விசாரணை நடக்க ஏதுவாக முதலமைச்சரை பதவியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் வலியறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் மனு அளித்திருந்தனர். 

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஜெயவர்தன், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்து ஸ்டாலின் எழுப்பிய புகார் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி கோடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என தெரிவித்தார். 

ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டியதற்காக ஸ்டாலின் அவமானப்படுவார் என்றும் முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பதால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com