கோவை : கொரோனா அறிகுறிகளுடன் 28 வயது இளைஞர் உயிரிழப்பு

கோவை : கொரோனா அறிகுறிகளுடன் 28 வயது இளைஞர் உயிரிழப்பு

கோவை : கொரோனா அறிகுறிகளுடன் 28 வயது இளைஞர் உயிரிழப்பு
Published on

கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் 28 வயது இளைஞர் ஒருவர் மேலாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கோவை வந்த அவர், சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கடும் காய்ச்சல், மூச்சுத் திணறல் அதிகமானது. இதனால் சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இளைஞர் உயிரிழந்தார். இரண்டாவதாக எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே கொரோனா தொற்றால் உயிரிழப்பா என்பதை உறுதிப்படுத்த இயலும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com