கோயம்பேட்டில் சிறு குறு வியாபாரம் அனுமதிக்கப்படுமா? இன்று பேச்சுவார்த்தை

கோயம்பேட்டில் சிறு குறு வியாபாரம் அனுமதிக்கப்படுமா? இன்று பேச்சுவார்த்தை
கோயம்பேட்டில் சிறு குறு வியாபாரம் அனுமதிக்கப்படுமா? இன்று பேச்சுவார்த்தை

கோயம்பேடு சந்தையில் சிறு குறு வியாபாரத்தை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வியாபாரிகள் - சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு, ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் சிறு குறு வியாபாரத்திற்குத் தடைவிதித்தது. சிறு குறு வியாபாரத்திற்குத் தடை விதித்தால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என கடந்த 9 ஆம் தேதி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கோயம்பேடு வணிக நிர்வாக முதன்மை இயக்குநர் கோவிந்த் ராஜ், சி.எம்.டி.ஏ நிர்வாக செயலாளர் கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், ஏப்ரல் 10ஆம் தேதி சுழற்சி முறையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதனால் போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்பட்ட நிலையில், இன்று சிறு வியாபாரிகள், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், போராட்டம் தொடரும் என சிறு வியாபாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com