தமிழ்நாடு
வார இறுதி நாட்கள் என்பதால் கோயம்பேட்டில் குவிந்த பயணிகள்!
வார இறுதி நாட்கள் என்பதால் கோயம்பேட்டில் குவிந்த பயணிகள்!
நாளை தமிழகம் முழுக்க முழு ஊரடங்கு என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் சூழலில் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு ஊரடங்கும் அறிவித்தது. நாளை முழு ஊரடங்கு என்பதால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று அதிகரித்துள்ளது. ஒரு பேருந்தில் 20 இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று 46 இருக்கைகள் வரை அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் செல்லும் தென்மாவட்ட பேருந்துகளில்தான் அதிக கூட்டம் காணப்பட்டது.

