கோவில்பட்டி: ரயிலில் திருமணத்திற்குச் செல்ல வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கோவில்பட்டி: ரயிலில் திருமணத்திற்குச் செல்ல வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கோவில்பட்டி: ரயிலில் திருமணத்திற்குச் செல்ல வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
Published on

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெட்டி மாறி ஏறியதால் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற பெண் ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ஓ.லட்சுமிநாராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த லிங்கசாமி என்பவரின் மனைவி பேபி சாந்தி (52). இவர், செங்கல்பட்டியில் நாளை நடைபெற உள்ள தனது சகோதரியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள ரயில் மூலமாக செங்கல்பட்டு செல்ல கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பு பதிவு இல்லாத பெட்டியில் ஏறுவதற்கு பதிலாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறியுள்ளார். இதையடுத்து பேபிசாந்தி ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்றபோது ரயில் புறப்பட்டு விட்டதால் பேபிசாந்தி தடுமாறி ரயிலுக்குள் விழுந்துள்ளார்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் பேபி சாந்தியை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர் ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார், உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com