தமிழ்நாடு
கோவில்பட்டி: நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முன்னாள் மாணவர்கள்
கோவில்பட்டி: நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முன்னாள் மாணவர்கள்
கொரோனா ஊரடங்கினால் வருமானம் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நாட்டுபுற இசைக் கலைஞர்களுக்கு கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உதவிக்கரம் நீட்டினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை பகுதியைச் சேர்ந்த 7 நாட்டுபுற இசைக் கலைஞர்கள் கொரோனா ஊரடங்கால் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் போதிய வருமானம் இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.
இவர்களுக்கு கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரி 92-95 ஆண்டு தாவரவியல் படித்த மாணவ, மாணவியர் அத்தியாவசிய தேவையை பூர்த்திசெய்ய முன்வந்தனர். பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கி உதவினர். மேலும் கோவில்பட்டி பகுதியில் இருந்து உதவி வேண்டிய மற்றொரு மூதாட்டிக்கும் அரிசியும், மளிகைப் பொருள்களும் வழங்கபட்டது.
- மணிசங்கர்