கோவை: மனநலம் பாதித்தவருக்கு முடி வெட்டி, புது ஆடை போட்டு உரிய இடத்தில் சேர்த்த போலீஸ்

கோவை: மனநலம் பாதித்தவருக்கு முடி வெட்டி, புது ஆடை போட்டு உரிய இடத்தில் சேர்த்த போலீஸ்

கோவை: மனநலம் பாதித்தவருக்கு முடி வெட்டி, புது ஆடை போட்டு உரிய இடத்தில் சேர்த்த போலீஸ்
Published on

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த நபரை மீட்டு புத்தாடை அணிவித்து ஆசிரமத்தில் சேர்த்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு கொரோனோ வைரஸ் குறித்தும் பல வகைகளில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி் வருகின்றனர்.

அத்துடன் ஆதரவற்றோருக்கும் காவல் துறையினர் உதவி வருகின்றனர். அந்த வகையில் கோவை போலீசாரும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆதரவு இல்லங்களில் சேர்த்தும் தங்களது சேவையை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை செல்வபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றித்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரை செல்வபுரம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் குழு மீட்டது. இதனையடுத்து மீட்கப்பட்ட முதியவருக்கு முடி வெட்டி, புத்தம்புதிய ஆடை அணிவித்ததுடன், உணவு வழங்கிய காவல் துறையினர் அவரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்தனர். காவல்துறைனரின் இந்த செயல்பாடு கோவை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com