கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதல் முறையாக கட்டப்பட்ட ஸ்மார்ட் கழிப்பறையை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார் .
கோவையை அடுத்த பாலசுந்தரம் சாலையில் 98 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இலவச ஸ்மார்ட் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிப்பறையை ஊரக வளர்ச்சி மற்றும் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று திறந்து வைத்தார் . இந்த கழிப்பறையில் குளியலறையும் , உடை மாற்றும் அறையும் கட்டப்பட்டு உள்ளது . ஏற்கெனவே காந்திபுரம் பகுதியில் ஸ்மார்ட் கழிப்பறை கட்டப்பட்டு இருந்தாலும் , அந்த கழிப்பறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது .
ஆனால் இங்கு கட்டப்பட்ட கழிப்பறை முற்றிலும் இலவசமாக மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் . கோவையின் பிரதான பேருந்து நிலையமான காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகே அமைந்து உள்ளதால் , பயணிகளுக்கு இந்த கழிவறை வசதி பயனுள்ளதாக இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் .
மேலும் இந்த கழிவறை கட்டிடத்தில் விரைவில் wifi வசதியை ஏற்படுத்த உள்ளதாக கோவை மாநகர ஆணையாளர் விஜயகார்த்திகையேன் தெரிவித்தார் . இந்த wifi வசதி மூலமாக ரயில், விமான டிக்கெட்டுகள் தொடர்பான விபரங்களையும் , மெயிலில் தகவல்களை பார்த்து கொள்ளலாம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் . ஆனால் வீடியோ , படங்கள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாது எனவும் தெரிவித்து உள்ளனர் .