கோவையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனை நோயாளிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏர் ஆம்புலன்ஸ் சேவையை இந்திய விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா தொடக்கி வைத்தார்.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் பல்வேறு மேல் சிகிச்சைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்வதற்காக ஏர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா கலந்துக்கொண்டார். இந்த விழாவில் அவசர கால விமான மருத்துவ சேவை செயல்பாடு குறித்த ஒத்திகையையும் பிரேந்தர் சிங் பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 1999ல் கார்கில் போரில் படுகாயமடைந்த ஏராளமான வீரர்கள் விமானம் மூலம் டெல்லி, காஷ்மீர், சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்ற பட்டதாகவும் அதற்கு பிறகே 17 இந்திய விமானங்கள் ஏர் ஆம்புலனஸ் ஆக மாற்றலாம் என முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறினார். இந்திய விமான படை ஏர் ஆம்புலன்ஸ் கடந்த 2007ல் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டதுடன் தனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு ஏர் ஆம்புலனஸ் மூலம் காப்பாற்றப்பட்டதால் இந்த ஏர் ஆம்புலனஸ் முக்கியத்துவத்தை தான் அறிந்துள்ளதாகவும் நினைவு கூர்ந்தார்.