இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் கோவை ஈஸ்வரன் காலமானார்.
சென்னை நந்தனத்தில் உள்ள அவரது வீட்டில், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. முதுபெரும் தலைவரான கோவை ஈஸ்வரன், நினைவாற்றல் இழந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு 7.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உழைக்கும் மக்களின் இயக்கத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து, எளிமையான போராளியாக வாழ்ந்து வந்தவர் கோவை ஈஸ்வரன் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.