திட்டமிட்டே கொலை செய்தேன் : மாணவி கொலை வழக்கு குற்றவாளி வாக்குமூலம்

திட்டமிட்டே கொலை செய்தேன் : மாணவி கொலை வழக்கு குற்றவாளி வாக்குமூலம்
திட்டமிட்டே கொலை செய்தேன் : மாணவி கொலை வழக்கு குற்றவாளி வாக்குமூலம்

கோவையில் கொலைசெய்யப்பட்ட பெண்ணால் நான் கடனாளியாக ஆனேன் என கைதான சதீஸ்குமார் அதிரடி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 5ஆம் தேதி தனது தாயாருக்கு போன் செய்து விடுமுறை என்பதால் வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வீடு வந்து சேரவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் உள்ள ஏ நாகூர் பகுதியில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலைசெய்யப்பட்ட பெண் மாயமான ஒட்டன்சத்திரத்தை சேர்த்த கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் பெண்ணின் உறவினரான சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சதீஸ்குமார் தான் கல்லூரி மாணவியை கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், “தானும் இறந்து போன தனது அத்தை மகளும் சிறு வயது முதலே ஒருவருக்கொருவர் விரும்பி வந்தோம். இருவரும் திருமணம் செய்ய விரும்பிய நேரத்தில் எனக்கு எனது விருப்பமில்லாமல் எனது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து விட்டனர். இருப்பினும் தொடர்ந்து இறந்து போன கல்லூரி மாணவியுடன் பழகி வந்தேன். 

தனக்கு குழந்தை பிறந்த பின்பு அவருடன் பேச்சுவார்த்தையை குறைத்து கொண்டேன். இந்நிலையில், அவருக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க தேதி குறித்தனர். அதனால் இனி என்னை தொந்தரவு செய்யமாட்டார் என நினைத்திருந்தேன். ஆனால் அவர் எனக்கு போன் செய்து என்னுடன் தான் வாழ்வேன் எனவும், திருமணத்தில் விருப்பமில்லை எனவும் புலம்பி வந்தார். அவருடன் பழகிய காலங்களில் அவருக்கு நகை, உடை வாங்கி கொடுத்து கடனாளியாகி ஆனேன். 

இந்நிலையில் அவள் மேலும் மேலும் என்னிடம் நகை பணம் கேட்டு நச்சரித்து வந்தார். என்னுடன் தான் வாழ்வேன் என கூறி வந்தார். அதனால் கோபமடைந்து வாழ்க்கை வீணாகிவிடும் என பயந்து, திட்டமிட்டு அவரை அழைத்து சென்று கொலை செய்து உடலை சாலையோரம் வீசி சென்றேன்.” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com