5 மாதத்தில் 4 பேர் பலி: கோத்தகிரி நீர்வீழ்ச்சியின் அபாயம்

5 மாதத்தில் 4 பேர் பலி: கோத்தகிரி நீர்வீழ்ச்சியின் அபாயம்
5 மாதத்தில் 4 பேர் பலி: கோத்தகிரி நீர்வீழ்ச்சியின் அபாயம்

கோத்தகிரியில் உள்ள கேத்ரீன் நீர் வீழ்ச்சியின் அழகை ரசிக்க செல்லும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள விபரீதத்தை அறியாமல் தொடர்ந்து பலியாகி வருகிறார்கள். இதுவரை 5 மாதத்தில் மட்டும் குளிக்கச் சென்ற 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோடை வாசஸ்தலமாக விளங்கும் நீலகிரியில், உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைக்காரா, தொட்டபெட்டா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ், கோத்தகிரி கோடநாடு காட்சி முனை மற்றும் கேத்ரீன் நீர்வீழ்ச்சி ஆகியவை முக்கித்துவம் பெற்றுள்ளன. கோத்தகிரியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது கேத்ரீன் நீர்வீழ்ச்சி. சாதாரண நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் உட்பட, உள்ளூர் மக்கள் அதிகளவில் இங்கு வருகின்றனர்.

அழகு நிறைந்த இந்த இடத்தில்தான் அதிக ஆபத்து நிறைந்திருக்கும் என்பதை பெரும்பாலான சுற்றுலா பயணிகள் உணருவதில்லை. இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர், காட்சி கோபுரத்துடன் திரும்பாமல், நீர்வீழ்ச்சியின் அருகில் தடைகளை மீறி சென்று குளிப்பதையும் பாசிப்படர்ந்த பாறைகளில் விளையாடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கோத்தகிரி குஞ்சப்பணை ஊராட்சி எல்லைக்குள் வரும் இந்த நீர்வீழ்ச்சியை, சுற்றுலாத்துறை பராமரித்து வந்தாலும், இங்கு பாதுகாப்பு வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. ஆபத்து நிறைந்த பாறையை தாண்டி சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க, அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலியும் உடைந்துள்ளது. ஆகவே சுற்றுலா பயணிகள் எளிதாக இந்தக் கம்பிகளை தாண்டி செல்கின்றனர். நீரில் விளையாட செல்லும் சுற்றுலாவாசிகள் விபத்தில் சிக்கி தொடரும் உயிர் பலி ஆகின்றனர். அதை உடனடியாக தடுத்து முறையான பாதுக்காப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com