கொசஸ்தலை ஆற்றங்கரையில் திடீர் உடைப்பு; மக்கள் அச்சம்

கொசஸ்தலை ஆற்றங்கரையில் திடீர் உடைப்பு; மக்கள் அச்சம்
கொசஸ்தலை ஆற்றங்கரையில் திடீர் உடைப்பு; மக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட உடைப்பு செய்தி புதிய தலைமுறையில் வெளியானதையடுத்து, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். தொடர் மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது‌. மேல்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்து ஆற்றுக்கு செல்ல வேண்டிய நீர் ஊருக்குள் புகும் அபாயம் இருப்பதாக காரனோடை பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறையினர் கரையை பலப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். கரை உடைப்பால், விவசாய நிலத்தில் உள்ள மின்கோபுரங்கள் சாய்ந்துவிழும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் கூறி‌னர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com