“தமிழக அரசின் செயல்பாட்டை பொறுத்து கொங்குநாடு பரிசீலனை” - வானதி சீனிவாசன்

“தமிழக அரசின் செயல்பாட்டை பொறுத்து கொங்குநாடு பரிசீலனை” - வானதி சீனிவாசன்
“தமிழக அரசின் செயல்பாட்டை பொறுத்து  கொங்குநாடு பரிசீலனை” - வானதி சீனிவாசன்

வரும் நாட்களின் மாநில அரசாங்கம் எப்படி கொங்கு பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறதோ அதன் அடிப்படையில் கொங்குநாடு பரீசிலைனை வரலாம் என பாஜகவின் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவின் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேசுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசாங்கம் கொடுக்கின்ற தடுப்பூசிகளை ஒரு சிலர் எடுத்து கொண்டு போய் தனியார் மருத்துவமனைக்கு கொடுப்பதாக தகவல் வருகிறது. அதற்கான ஆதாரத்தைக் திரட்டி வருகிறோம். இந்த விஷயத்தில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். தகுந்த முறையில் வேகமாக தடுப்பூசிகளை மாநில அரசு செலுத்த வேண்டும்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரை அழகுபடுத்த கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது. அந்த கோயில்களை வேறு இடத்திலோ அல்லது அருகிலோ கட்டி மக்களின் மத உணர்வுகளைக் காக்க வேண்டும்.

தொலைபேசி ஓட்டு கேட்ட விவாகரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு என்ன உண்மை இருக்கிறதோ அதைக் மத்திய அரசு வெளியிடும்.

தமிழ்நாட்டைக் தனியாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. கொங்கு பகுதி மக்களின் தேவைகள், வளர்ச்சிகள் உள்ளிட்டவை இம்மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. எனவே வரும் நாட்களின் மாநில அரசாங்கம் எப்படி இம்மக்களின் கோரிக்கையைக் நிறைவேற்றுகிறதோ அதன் அடிப்படையில் கொங்குநாடு பரீசிலைனை வரலாம்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com