கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையும் அல்ல: இரட்டை இலை வெற்றிச் சின்னமும் அல்ல - ரகுபதி

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையும் அல்ல: இரட்டை இலை வெற்றிச் சின்னமும் அல்ல - ரகுபதி
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையும் அல்ல: இரட்டை இலை வெற்றிச் சின்னமும் அல்ல - ரகுபதி

கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையல்ல, இரட்டை இலை வெற்றிச்சின்னம் இல்லை இந்தியாவின் முதலாவது முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்கிறார். என திமுக பொதுக் கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூரில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில்...

ஈரோடு இடைத்தேர்தல் 21 மாத கால திமுக ஆட்சியை எடை போடும் எடைத்தேர்தலாக அமைந்துள்ளது. கொங்கு மண்டலம் எங்களது என்று சொன்னவர்களுக்கு கொங்கு மண்டலம் சம்பந்தமில்லை என்று நிரூபிக்கின்ற தேர்தலாக அமைத்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை தோல்வியை சந்திக்காத இலையா? எத்தனையோ தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது.

இரட்டைஇலை வெற்றிச்சின்னம் இல்லை. உதயசூரியன் சின்னம் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ள சின்னம். இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் என்ற பெருமையை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தந்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். பத்தாண்டு காலத்தில் அதிமுக விட்டுச்சென்ற பணிகளை தற்போது திமுக சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வருவோம்.

கிராமப்புற முன்னேற்றத்தில் தான் இந்தியாவின் முன்னேற்றமே உள்ளது. ஸ்டாலின் ஆட்சி, இந்தியாவே பாராட்டுகின்ற ஆட்சியாக உள்ளது என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com