தமிழ்நாடு
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தினேஷ் சவுத்ரி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக கைதான தினேஷுக்கு கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் மேற்கூரையில் துளையிட்டு தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நாதுராம், தினேஷ் சவுத்ரி உள்ளிட்டோரை காவல்துறை தேடி வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தமிழகத்திற்கு கொண்டுவர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தினேஷ் சிக்கிவிட்டதால், பெரியபாண்டியனை சுட்டுக்கொன்ற நாதுராமை விரைவில் பிடித்துவிட முடியும் என்று ராஜஸ்தான் காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.