\
கோடநாடு கொலை: சயான் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

கோடநாடு கொலை: சயான் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

கோடநாடு கொலை: சயான் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
Published on

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோடநாடில் கொலை மற்றும் கொள்ளை ‌நடந்த சில நாட்களில் சயான், தனது குடும்பத்துடன் சென்ற கார் விபத்துக்குள்‌ளானது. அதில் படுகாயமடைந்த அவர் ஏப்ரல் மாதம் முதல் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட சயான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.‌ அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க குன்னூர் நீதிபதி உத்தரவிட்டார்‌. இந்நிலையில், சயானுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com