கோடநாடு வழக்கை அச்சுறுத்தவோ, மிரட்டவோ, அரசு ஆயுதமாக பயன்படுத்தவில்லை: அமைச்சர் ரகுபதி

கோடநாடு வழக்கை அச்சுறுத்தவோ, மிரட்டவோ, அரசு ஆயுதமாக பயன்படுத்தவில்லை: அமைச்சர் ரகுபதி

கோடநாடு வழக்கை அச்சுறுத்தவோ, மிரட்டவோ, அரசு ஆயுதமாக பயன்படுத்தவில்லை: அமைச்சர் ரகுபதி
Published on

கோடநாடு வழக்கு விசாரணை சட்டப்படியே செல்கின்றது, அச்சுறுத்தவோ மிரட்டவோ இந்த வழக்கை ஆயுதமாகவோ அரசு பயன்படுத்தவில்லை, என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படக்கூடிய சட்டக்கல்லூரிகளும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் நிறைவேற்றப்படும்.

திருச்சி சிறையில் உள்ள அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பாதுகாக்க மட்டுமே தமிழக சிறைத் துறையால் முடியும், அவர்களை வெளியே விடுவது ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது” என்று கூறினார். 

மேலும் கோடநாடு வழக்கு குறித்து பேசுகையில், “கோடநாடு வழக்கு இன்னும் முடித்து வைக்கப்படவில்லை. சாட்சியங்கள் வாக்குமூலம் தர முன்வந்தால் கொடுக்கலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில்தான் வழக்கு செல்கின்றது. அதை விடுத்து யாரையும் அச்சுறுத்தவோ மிரட்டவோ அயூதமாக கோடநாடு வழக்கை பயன்படுத்தவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதைதான் செய்து வருகின்றது, இதற்கு சிலர் கோவம் அடைவது அரசை குறை கூறுவது நியாயமானது இல்லை. 

கோடநாடு வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும். இதில், சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா தற்கொலைக்கு தூண்டபட்டார்களா அல்லது கொலையா என்பது விசாரணையின் முடிவிலேயே தெரியவரும். அதைவிடுத்து அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவது என்று விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com